டிரைவர், கண்டக்டர்களுக்கு பரிசு

66பார்த்தது
டிரைவர், கண்டக்டர்களுக்கு பரிசு
சேலம் ஜே. சி. ஐ. ஸ்டீல் பெமினா சார்பில் டிரைவர், கண்டக் டர்கள், 'சல்யூட் சைலன்ட் ஸ்டார்ஸ்' என்ற பெயரில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்கள் இரவு, பகல் பாராமல் பயணிகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத் துக்கு பத்திரமாக அழைத்து சென்று வருவதால் அவர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர் பத்ரிகிருஷ்ணா பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஜே. சி. ஐ. ஸ்டீல் பெமினா தலைவி டாக்டர் ஜனனி ஈஸ்வரன், பொறுப்பாளர்கள் வர்னிஷா, திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர் களும் ஜே. சி. ஐ. ஸ்டீல் பெமினா சார்பில் பரிசு வழங்கி கவுர விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி