சேலம், எடப்பாடி அடுத்த, இருப்பாளி கிராமம் பகுதியில் ஸ்ரீகந்த மாரியம்மன் திருவிழா கடந்த (ஜூன். 6) தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை மகமேரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாண வேடிக்கை, குதிரை ஆட்டம், மாரியம்மன் ஆட்டம் போன்றவை நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.