கைப்பந்து போட்டி: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்கள் 2-மிடம்

83பார்த்தது
கைப்பந்து போட்டி: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்கள் 2-மிடம்
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள எனெபோயா நிகர்நிலை பல்கலைக்கழகம் தென்னிந்திய மருத்துவத்துறை சார்ந்த கல்லூரிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகளை சமீபத்தில் நடத்தியது. இந்த போட்டியில் தென்னிந்தியாவை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் குழுக்களாகவும், தனிநபர்களாகவும் பங்கேற்றனர். இதில் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். இந்த மாணவர்கள் கைப்பந்து போட்டியில் 2-ம் இடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர். துறையின் கண் ஒளியியல் பிரிவு மாணவர் சஞ்சய் சிறந்த ஆட்டநாயகனுக்கான பரிசை பெற்றார். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி இயக்குனர்கள் ஜெயபாரதி, சூர்யா ஆகியோரையும் துறையின் டீன் செந்தில்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி