சிவதாபுரத்தில் வெள்ளி உருக்கும் உரிமையாளர்கள் சங்க கூட்டம்

561பார்த்தது
சிவதாபுரத்தில் வெள்ளி உருக்கும் உரிமையாளர்கள் சங்க கூட்டம்
சேலம் வெள்ளி உருக்கும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவதாபுரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதில் வெள்ளி உருக்கும் உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சித்தேஸ்வரன், ஸ்ரீதர், அங்காண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் வெள்ளி செயின் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் ஆனந்தராஜன், நிர்வாகிகள் சின்னப்பன், ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி