தேசிய வங்கியில் பணிபுரிந்த நபருக்கு நேர்ந்த சோகம்

74பார்த்தது
தேசிய வங்கியில் பணிபுரிந்த நபருக்கு நேர்ந்த சோகம்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகேயுள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் (33) இவர் தேவூரில் தேசிய வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி சண்முகபிரியா(27) என்ற மனைவியும் வைஷ்ணிகா(4) மகளும் உள்ளனர், இந்நிலையில் யுவராஜ் கடந்த சில ஆண்டுகளாக மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்து வந்துள்ளார், இதனையடுத்து கடந்த 30ந் சனிக்கிழமை இரவு யுவராஜின் மாமா வீட்டிற்கு அவரது அம்மா பூரணிமனைவி சண்முகபிரியா ஆகியோர் அழைத்து சென்று உறவினர்கள் மூலம் அறிவுரை கூறியுள்ளனர், இதனையடுத்து தூங்க செல்வதாக வீட்டிற்கு போதையில் சென்ற யுவராஜ் வீட்டில் சேலையால் தூக்கிட்டு. தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைபார்த்த குடும்பத்தினர் பவானி தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து தேவூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

சங்ககிரி அருகே தேவூர் தேசிய வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த நபர் மதுவுக்கு அடிமையாகி மீள முடியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி