சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சென்றாய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி கோவிலை சுற்றி எடுத்து வந்து தேரில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.