புத்தாண்டில் சேலம் சிறுவர், சிறுமிகள் உலக சாதனை

4257பார்த்தது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் பாரம்பரிய கலைகளின் சங்கமம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்களை துணியால் மூடி கட்டிக்கொண்டு மண் தரையில் மண்டியிட்டு ஒரு மணி நேரம் பத்து நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்து அசத்தினர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் கராத்தே நடராஜனின் பாரம்பரிய கலைகளின் சங்கமம் சார்பில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்களை துணியால் மூடி கட்டிக் கொண்டு மண் தரையில் மண்டியிட்டு ஒரு மணி நேரம் 10 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றி வேர்ல்டு சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்டில் உலக சாதனை புரிந்து அசத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

இதனைத் தொடர்ந்து உலக சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி