சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

64பார்த்தது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த உலக மூவேந்தர் குழு சார்பில் சங்ககிரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா மூவேந்தர் சிலம்பாட்ட குழு தலைவர் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், துணைச் செயலாளர் சௌந்தரராஜ், நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கி மாணவ மாணவிகளை பாராட்டினர்.

அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன் முத்தமிழ் சிலம்பாட்ட குழு தலைவர் சுரேஷ் உட்பட மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி