தேசிய விருது பெற்ற சேலம் டாக்டருக்கு பாராட்டு விழா

70பார்த்தது
தேசிய விருது பெற்ற சேலம் டாக்டருக்கு பாராட்டு விழா
இந்திய மருத்துவ சங்கத்தின் 98-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26 முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சேலத்தை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் மருத்துவத்துறையில் ஆற்றிய சேவைகளை பாராட்டி 'சிறப்பு பாராட்டு விருது' என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்திய மருத்துவ சங்க ஜூனியர் டாக்டர் நெட்வொர்க் தலைவர் டாக்டர் கே. எம். அபுல் ஹசன் வழங்கினார். இந்த மாநாட்டில் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், சசிதரூர் எம். பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் ஏற்கனவே சிறந்த மருத்துவ மாணவர், சிறந்த இளம் மருத்துவர் விருதுகள் உள்பட 4 விருதுகள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 5-வது முறையாக விருது பெற்ற டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயனுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் டாக்டர் பிரகாசம் (சேலம்), மாநில ஜே. டி. என். தலைவர் டாக்டர் ஹரிஹரன், மற்றும் டாக்டர்கள் ஜமுனாராணி, ஜி. எஸ். குமார் உள்பட இந்திய மருத்துவ சங்கத்தினர் கலந்து கொண்டு டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயனை பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி