சங்ககிரியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

50பார்த்தது
சங்ககிரியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி நகர், புதிய எடப்பாடி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாபகமாக பிடித்ததால் பெரும் பரபரப்பு.

சங்ககிரி அருகேயுள்ள கஸ்தூரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் பூபதி. சங்ககிரி, புதிய எடப்பாடி சாலையில் அவரது இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது புதிய எடப்பாடி சாலை பகுதியில் ஒரு பகுதியிலிருந்து சாலையில் வெளி வந்த பாம்பு சாலையோரம் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தில் புகுந்து கொண்டது.

அதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கவனித்து சத்தமிட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கருவிகளை கொண்டு இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பினை உயிருடன் மீட்கப்பட்ட பாம்பினை சூரிய மலை காட்டில் விட்டனர். இரு சக்கர வாகனத்தில் பகல் நேரத்திலேயே பாம்பு புகுந்தது அப்பகுதி மக்களிடத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி