சேலத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பு ‘கேக் வெட்டி கொண்டாட்டம்

63பார்த்தது
ஆங்கில புத்தாண்டு - 2024ம் ஆண்டு பிறப்பையொட்டி, சேலம் மாநகர், மாவட்டத்தில் நள்ளிரவு, 12: 00 மணிக்கு, 'கேக்' வெட்டி, மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏராளமானோர், 'கேக்' வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அப்போது பட்டாசுகள் வெடித்து, 2024ம் ஆண்டை வரவேற்றனர். மேலும் சினிமா பாடல்களுக்கு
ஆங்காங்கே ஆட்டம் போட்டனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, மாநகர், மாவட்ட போலீசார், தீவிர
ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிவேகமாகவும், குடித்துவிட்டும், வாகனங்கள் ஓட்டிச்சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சி. எஸ். ஐ. , 4 ரோடு குழந்தை இயேசு, அஸ்தம்பட்டி
இமானுவேல், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார்,
அழகாபுரம் துாய மிக்கேல் உள்பட, மாவட்டம் முழுதும்
உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. அதில் திரளானோர் ஜெபித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you