சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதி காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், டி. எம். செல்வகணபதி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஆரத்தி எடுத்து பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.