பத்மவாணி மகளிர் கலைக்கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம்

567பார்த்தது
பத்மவாணி மகளிர் கலைக்கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம்
சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சியில்) ஆங்கில புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி, செயலாளர் துரைசாமி, இயக்குனர் இசைவாணி சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாணவிகள், பேராசிரியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர்.
இதில் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஹரிகிருஷ்ணராஜ், பத்மவாணி மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வரும், முதன்மை அலுவலருமான முத்துக்குமார், செயல் அலுவலர் ரமேஷ், துணை முதல்வர் பழனியம்மாள் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :