திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். மாயி திரைப்படத்தின் வசனத்தை கூறி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த நகைச்சுவை நடிகர். கோசா பழம் கடையில் பழங்களை வெட்டி அனைவருக்கும் வழங்கி வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது அரசியல் கட்சியினர் இறுதி கட்டப் பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் மாயி திரைப்படத்தின் புகழ் பாவா லட்சுமணன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.