ஓமலூரில் சான்றுகளை புதுப்பிக்காத 2 ஆட்டோக்கள் பறிமுதல்

81பார்த்தது
ஓமலூரில் சான்றுகளை புதுப்பிக்காத 2 ஆட்டோக்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம், ஓமலூர் நகர் மற்றும் வட்டார பகுதிகளில் டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் விதிகளை மீறி இயக்கப்படுவதாகவும், சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய வாகனங்களை, வாடகைக்கு இயக்குவதாகவும் ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா. நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். சோதனையில் பதிவு சான்று. வாகன புதுப்பிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி, விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 ஆட்டோக்களை, அவர் பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

டேக்ஸ் :