தொழிலாளியை தாக்கிய 12 பேர் மீது வழக்கு

83பார்த்தது
தொழிலாளியை தாக்கிய 12 பேர் மீது வழக்கு
தொளசம்பட்டி பெரியேரிப்பட்டியை சேர்ந்தவர் மேகவர்ணன் (வயது 32), தொழிலாளி. இவர் நங்கவள்ளி அருகே வீரக் கல்லை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு போன் செய்து உனக்கு தரவேண்டிய பணத்தை நங்கவள்ளியில் வந்து வாங் கிக்கொள் என்று கூறியுள்ளார். இதையடுத்து மேகவர்ணன் நங்கவள்ளிக்கு வந்த போது ராஜ்குமார், இவருடைய தாயார் உண்ணாமலை மற்றும் சின்ராஜ் நரசிம்மன், யோகராஜ் உள் பட 12 பேர் இரும்பு, பீர் பாட்டிலாலும் மேகவர்ணனை தாக்கி பணம், தங்கசங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகா ரின் பேரில் நங்கவள்ளி போலீசார் 12 பேர் மீது வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த மேகவர்ணன் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி