சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் எஸ். கே. அர்த்தனாரி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஓசுமணி, மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, கனகராஜ், நகர காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் நாமம் போட்ட பதாகைகளை ஏந்தியும், காதில் பூ சுற்றியபடியும் மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.