ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

79பார்த்தது
ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி 15-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது56). விவசாயியான இவர், தனது நிலத்தின் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முருகேசன் உடலை மீட்டனர். முருகேசன் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது சாவு தொடர்பாக மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி