'பழைய பஸ்க்கு பெயிண்ட் அடிச்சு புதிய பஸ்' என்று கூறி இயக்குவதாக அரசு பேருந்து காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இது தவறான தகவல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் ஆலோசனைப்படி, 5 முதல் 8 ஆண்டுகள் வரை முடிந்த பேருந்துகள் மட்டுமே "full body renovation" செய்யப்படுகிறது. இதிலிருந்து பழுதுபார்க்கும் பிரிவில் வேலை செய்து மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு தகுதி சான்று பெற்று இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.