பிக் பாஸ் இல்லத்தில் ரவீனா தாஹா

381பார்த்தது
பிக் பாஸ் இல்லத்தில் ரவீனா தாஹா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இரு வீடுகள் என ப்ரோமோஷனில் கமல்ஹாசன் அறிவித்த நிலையில் ஒரே வாசல் இரு வீடு என்ற கான்செப்டில் அமைக்கப்பட்ட வீட்டை கமல் சுற்றிக் காட்டினார். இதனை தொடர்ந்து முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் அறிமுகமாகியுள்ளார். இவரை தொடர்ந்து விஜய் டிவி சீரியல் மௌன ராகம் மூலம் பிரபலமான ரவீனா தாஹா போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி