விநாயகர் சதுர்த்தி: பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு.!

69பார்த்தது
திருவாடானை அருகே உப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவில் முன்பு உள்ள பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே ராமநாதபுரம்- சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வெயில் உகந்த விநாயகர் கோவில் உள்ளது.  ராமபிரான் வழிபட்டதாக கருதப்படும் இந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சதுர்த்தி விழா கடந்த ஆக. 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்தாம் நாள் திருவிழாவான இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலின் உற்சவ மூர்த்தியான விநாயகர் ரிஷப வாகனத்தில் கடலில் புனித நீராடி பின்பு பக்தர்கள் பல்லக்கில் சுமந்து கோவிலை வந்தடைந்தார். அதன் பின்னர் கடலில் நீராடி பக்தர்கள் காவடி, எடுத்தும், பால்குடம் சுமந்தும், அழகு குத்தியும் மேளதாளங்கள் முழங்க ஆரவாரத்துடன் வந்து உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் முன்பாக வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.


இந்த விழாவில் பெண்கள் உட்பட சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி