மதுக் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை.!

82பார்த்தது
திருவாடானை அருகே கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்த மதுக் கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருவாடானை அருகேயுள்ள ஆா். எஸ். மங்கலம் குமரையாகோவில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் முருகானந்தம் (47). இவா் இந்தப் பகுதியிலுள்ள மதுக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த இளையராஜா விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், ஆா். எஸ். மங்கலம் பெருமாள்மடையைச் சோ்ந்த உலகு மகன் மணிமாறன் (42) ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மதுக் கடைக்கு சென்று, கடனுக்கு மதுபானம் தருமாறு கேட்டாராம்.

இதற்கு மறுப்புத் தெரிவித்ததால், கடையின் விற்பனையாளா் இளையராஜாவுக்கும், மணிமாறனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தட்டி கேட்ட மேற்பாா்வையாளா் முருகானந்தத்தை அவா் மதுப்புட்டியை உடைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாராம். இதுகுறித்து ஆா். எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி