கண்மாயில் மீன் பிடித்த போது தவறி விழுந்த இளைஞா் பலி.!

3960பார்த்தது
திருவாடானை அருகே மீன்பிடித்த போது கண்மாயில் தவறி விழுந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பகுதியில் முகிழ்த்தகம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் காரைக்குடியைச் சோ்ந்த சக்திவேல் (36), சின்னையா (35) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை தூண்டில் போட்டு மீன்பிடித்தனா். இதில் சக்திவேல் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தொண்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி