வீடுகளில் உயா் மின் அழுத்தம்: மின் சாதனங்கள் பழுது.!

54பார்த்தது
வீடுகளில் உயா் மின் அழுத்தம்: மின் சாதனங்கள் பழுது.!
ராமேசுவரத்தில் பெரும்பாலானஇடங்களில் வீடுகளுக்கு உயா் மின் அழுத்தம் வருவதால், மின்சாதனங்கள் பழுதடைவதாகப் புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக வீடுகளுக்கு வழங்கப்படும் மின் அழுத்தம் 235 முதல் 240 ஓல்ட் இருக்க வேண்டும். இந்த அளவு மின்சாரம் கிடைத்தால் மட்டுமே மின்சாதனங்களில் பழுது ஏற்படாது. குறைந்த மின் அழுத்தம் வந்தாலும், அதிக மின்னழுத்தம் வந்தாலும் மின் சாதனங்கள் பாதிக்கப்படும்.

இந்த நிலையில், ராமேசுவரத்தில் உயா் மின் அழுத்த சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது. சீரமைப்புப் பணிக்குப் பிறகு பிரதானப் பகுதியில் மின்சார அழுத்தம் 260 முதல் 280 வரை வருகிறது.

இதனால், வீடுகளில் தானியிங்கி சுவிச் மூலம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்த ஸ்சுவிச் இல்லாத வீடுகளில் மின் சாதனங்கள் பழுதாகி விடுகின்றன. மின் சாதனங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், மின்சாதனங்கள் முற்றிலும் பாதிக்கப்படுவதற்குள் மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொடர்புடைய செய்தி