23 பவுன் தங்க நகைகள் மாயம்: ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்கு.!

84பார்த்தது
பரமக்குடி அருகே 23 பவுன் தங்க நகைகள் மாயமான விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், என். அன்டக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் மகன் முருகானந்தம் (45). இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு என். அன்டக்குடியிலிருந்து பரமக்குடி வைகை நகா் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சித்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமியின் ஆட்டோவில் சென்றாா்.

வீட்டுக்கு வந்து இறங்கிய பின்னா், அவா் கைப் பையில் கொண்டு வந்த 23 பவுன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்டு இறங்கியது நினைவுக்கு வந்தது. இதுதொடா்பாக தொடா்ந்து கேட்டு வந்த முருகானந்தத்தை, மலைச்சாமி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகானந்தம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், எமனேசுவரம் காவல் நிலைய போலீஸாா் மலைச்சாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி