கண்மாயில் தொடரும் சவடு மண் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

74பார்த்தது
கண்மாயில் தொடரும் சவடு மண் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாராயணபுரம்}வல்லந்தை சாலையில் உள்ள செங்கோட்டை கண்மாயில் மழைக்காலத்தில் தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில் தற்போது வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் பெரிய லாரிகள், டிராக்டர்களில் இரவு நேரங்களில் பொக்கலைன் இயந்திரங்கள் உதவியுடன் மணல் திருட்டுல் ஈடுபடுவதாகவும், இதனால் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த மார்ச் மாதம் இதேபோன்று மனல் திருட்டு நடைபெற்றதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து கமுதி வருவாய்த்துறை மற்றும் மண்டலமாணிக்கம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் போலீஸôர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி