திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயை மூட கோரிக்கை.!

64பார்த்தது
திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயை மூட கோரிக்கை.!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் சாலையோரம் திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயை மூட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.

கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ராட்சத தண்ணீா் தொட்டி எதிரே சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாய் மூடப்படாமல் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி உள்ளது.

இதனால் அந்த வழியாக சாயல்குடி, திருச்செந்தூா் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், லாரிகள், சரக்கு வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது கால்வாயில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவ்வப்போது கால்வாயில் தவறிவிழுந்து காயமடைந்து வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில் கடந்த வாரம் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் கால்வாயில் விழுந்து கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்த திறந்தவெளி கழிவுநீா் கால்வாய் குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதியில் ஆபத்தான கழிவுநீா் கால்வாயில் கான்கிரீட் அமைத்து மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

டேக்ஸ் :