தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி மாணவிகள்- கமுதிஅருகே பரபரப்பு!

3659பார்த்தது
கமுதி அருகே உள்ள பேரையூர் அரசு மேல் நிலை பள்ளி மாணவியர்கள் இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் இருந்து பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11_ம் வகுப்பு படிக்கும் இன்பபிரியா என்ற மாணவி அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அசிங்கமாக பேசியதால் செங்கப்படையில் இருந்து கமுதி பேருந்து நிலையம் வந்து சாணி பவுடரை குடித்துள்ளார்.

உடனடியாக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இன்பப் பிரியா முதலுதவி செய்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு நலமுடன் உள்ளார்.

அதே பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் கீழகாஞ்சிரன்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயலெட்சுமி அரையாண்டு தேர்வில் குறைவான மார்க் எடுத்ததால் வயலுக்கு வைத்து இருந்த பூச்சி மருந்தை வீட்டில் குடித்து வீட்டில் உள்ளவர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி