குடிநீர் தொட்டி சேதம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

75பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பவே மக்களின் குடிநீருக்காக உருவாக்கப்பட்ட குடிநீர் தொட்டி மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேட்டதற்கு பெண்களை சாதி குறித்து வன்முத்தோடு பேசியதோடு அல்லாமல் பெண்களை இழிவாகவும் அநாகரிகமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக்கண்ணு தலைமையிலான போலீசார் அங்கு சென்றபோது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி