சந்தன மாரியம்மன் கோயில் பொங்கல் உற்சவம்.!

72பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சந்தன மாரியம்மன் கருப்பன சுவாமி கோவில் 26 ஆம் ஆண்டு முளைப்பாரி பொங்கல் உற்சவ விழா கடந்த 23ஆம் தேதி காப்பு கட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் மூலவர் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.

திருவிழாவின் கடைசி நாளாக முளைப்பாரியை கங்கை நீரில் கரைத்தல் நிகழ்ச்சி, கடலாடியின் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம் வானவேடிக்கை முழங்க நகர் வலமாக சென்று கங்கை நீரில் முளைப்பாரியை கரைத்தல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, கோவில் வளாகத்தின் முன்பாக முளைப்பாரிகளை பெண்கள் வட்டமிட்டு கும்மி பாட்டு இசைக்கு ஏற்றவாறு உற்சாக கும்மியாட்டம் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி