அய்யனார் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊர்வலம்.!

72பார்த்தது
அய்யனார் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊர்வலம்.!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெரியஉடப்பங்குளம் ஸ்ரீபொட்டகுளத்துஅய்யனார் கோயிலின் வைகாசி பொங்கல் விழா கடந்த மாதம் 31}ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடந்த 4}ம் தேதி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

5 ஆம் தேதி கோயில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள விநாயகர் கோயிலிலிருந்து முளைப்பாரி ஊர்வலம் சிறுமிகளின் கோலாட்டம், கேரள செண்டை மேளங்களோடு ஊர்வலமாக அய்யனார் கோயிலை அடைந்து முடிவில் குண்டாற்றில் முளைப்பாரி கரைக்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடு களை பெரிய உடப்பங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி