விவசாயிகளுக்கு செயலிகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

561பார்த்தது
விவசாயிகளுக்கு செயலிகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ. சுகந்தி தலைமையில் விவசாயிகளுக்கு செயலியின் முக்கியத்துவம் பற்றியும் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறை பற்றியும்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மேலும் மாணவி சுகந்தி தெரிவிக்கையில் ; இன்றைய காலகட்டத்தில் கிராமமக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள். அரசால் கொண்டுவரப்பட்ட விவசாய ஆஃப்கள் வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமானவும் ஒரு ஊடகமாகவும் மாறியுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும் மருந்துகளையும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி