மழைக்காலத்தில் பயணம் செய்வது மிகவும் கடினம். பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் போது கூட நமக்கு அசௌகரியம் ஏற்படும். இதேபோல் கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது. ரயிலில் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள ஓட்டை வழியாக கசிந்து மழைநீர் உள்ளே விழுந்தது. இதனால், பயணிகள் குடைகளை பிடித்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்தனர். இந்த சம்பவம் 2023இல் நடந்த நிலையில், கேரள காங்கிரஸ் மீண்டும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து, ரயில்வே துறையின் நிலை இப்போதும் இதே போல்தான் உள்ளது என கூறியுள்ளது.