டென்னிஸ் ஜாம்பவானும் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரருமான ரஃபேல் நடால் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட சிரமப்பட்டதாக தெரிவித்துள்ள நடால், நவம்பர் மாதம் மலகாவில் நடைபெறும் டேவிஸ்ல கோப்பை தொடரே தனது இறுதிப்போட்டி என உருக்கமாக தெரிவித்துள்ளார். ரஃபேல் நடால் 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.