பூச்சொரிதல் விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டி சாலை மறியல்!

77பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் நிலையப்பட்டி கிராமத்தில் உள்ள பொது இடத்தில் இருந்து பொதுமக்கள் ஒன்று கூடி பூச்சொரிதல் விழாவிற்கு செல்வதற்கு தனிநபர் ஒருவர் இலுப்பூர் தாசில்தாரிடம் தடை அனுமதி பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மணப்பாறை சாலையில் அண்ணா பண்ணை அருகில் பூச்சொரிதல் விழாவிற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூச்சொரிதல் விழாவிற்கு மாற்று இடத்தில் இருந்து விழா ஏற்பாடு செய்ய அனுமதிப்பதாக வருவாய் துறை சார்பில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகள் நடத்தும் இடத்தில் தான் நடத்துவோம் என கோரிக்கை வைத்தனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் வட்டாட்சியர் சூரிய பிரபு தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வழக்கமாக நிலைய பட்டு கிராமத்தில் நடைபெறும் பொது இடத்தில் இருந்து பூச்சொரிதல் விழாவை நடத்த வட்டாட்சியர் சூரிய பிரபு அனுமதி வழங்கினார். இதையடுத்து நிலைய பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி