பைக் விபத்தில் தொழிலாளி பலி!

57பார்த்தது
விராலிமலை: தஞ்சை மாவட்டம் பூதலுாரை அடுத்த இந்தலூர் கிரா மத்தை சேர்ந்தவர் பிரபு (39). டிப்ளமோ முடித்துள்ள இவர் விராலிமலை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாள ராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் நண்பரின் திருமணத்துக்காக பைக்கில் கீரனூர் சாலையில் சென்றார். அப்போது ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் புளிய மரத்தில் மோதியதில் காயமடைந்த பிரபுவை அந்த வழியாக வந்தவர் கள் மீட்டு சிகிச்சைக்காக நீர்பழனி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாத்துார் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி