பொன்னமராவதி கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு!

65பார்த்தது
பொன்னமராவதி கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு!
பொன்னமராவதி பாலமுருகன் கோயில் மற்றும் ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாத கார்த்திகை நாளையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட் பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றுவழிபட்டனர். வழிபாட்டில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கார்த்திகை விழாக் குழுவினர் செய்திருந்தனர். இதேபோல், பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி