பிடாரம்பட்டி வைஷ்ணவி தேவி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

85பார்த்தது
பிடாரம்பட்டி வைஷ்ணவி தேவி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி வைஷ்ணவி தேவி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதையடுத்து பிடாரம்பட்டி, மணத்தோண்டி, காத்தரங்கூடம், வைரம்பட்டி பரமன்கூடம், வடக்கிப்பட்டி மற்றும் சுற்றுக்கிராம பொதுமக்கள் பால்குடம்மற்றும் பூத்தட்டு எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி