திருமயம்: பஸ் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

597பார்த்தது
சென்னையில் இருந்து காரைக்குடிக்கு நேற்று காலை தனியார் ஆம்னி பஸ் வந்தது. இந்த பஸ் திருமயம் அருகே மெய்யபட்டி விலக்கு ரோட்டை கடந்தபோது, எதிரே சாலையோரம் நடந்து வந்த முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் உடலை கைப்பற்றி அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் டிரைவர் தேவகோட்டையை சேர்ந்த மதிவாணன்(35) கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி