புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொந்த பிரச்சனை காரணமாக மனம் உடைந்து மரணமடைந்தார். இதனால் அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. மேலும் அவரது மகள் அபிநயா பொருளாதார நெருக்கடியினால் கல்வியை தொடர முடியாமல் தனது தாய் கோகிலாவை பிரிந்து தாய் மாமாவின் அரவணைப்பில் வாழ்வாதாரத்திற்காக புதுக்கோட்டையில் முந்திரி வியாபாரம் செய்து வருவது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியது.
இதை அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா நேரடியாக அப்பகுதிக்கு விரைந்து சிறுமியின் குடும்ப நிலை குறித்து கேட்டறிந்து அரசு சார்பாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதி அளித்தார். மேலும், கல்வியில் இடைநிற்றல் இருக்கக் கூடாது என்பதை அறிவுறுத்தி அச்சிறுமியை விடுதி (HOSTEL) வசதியோடு அமைந்துள்ள ஆர்.சி அரசு உதவி பெறும் உயர் துவக்கப்பள்ளி பள்ளியில் (15/05/2024) அன்று நேரடியாக சென்று சேர்த்துவிட்டார்.
இதுமட்டுமல்லாது அச்சிறுமிக்கு பாதுகாவலராகவும் (Guardian) தனது பெயரை பள்ளியில் வழங்கி அச்சிறுமி தொடர்ந்து கல்விகற்க தான் உதவுவதாக உறுதி அளித்தார். இது போல் பொதுமக்களுக்கு பல சமூக சேவைகளை செய்து வரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜாவை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.