100% வாக்குப்பதிவு திருநங்கைகளிடம் விழிப்புணர்வு!

85பார்த்தது
100% வாக்குப்பதிவு திருநங்கைகளிடம் விழிப்புணர்வு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கை வாக்காளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி தொடங்கி வைத்தார். இதில் வருவாய்க்
கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட
திருநங்கைகள் நலச்
சங்கத்தின் தலைவி ரெ.
ஷிவானி தலைமையில்
நடைபெற்ற இந்த
நிகழ்ச்சியில், கலை
நிகழ்ச்சிகள் மூலம்
வாக்காளர் விழிப்புணர்வு
பாடல்கள் பாடப்பட்டன.
கரகாட்டமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாக்காளர்களும் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குப்பதிவைச் செலுத்த வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெப்ப இயக்கமும், உறுதிமொழியேற்பும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி