புத்தாண்டு கொண்டாட்ட ரேஸ் டிரைவில் இளைஞர் பலி!

67பார்த்தது
கறம்பக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் கறம்பக்குடி செட்டிதெரு முக்கம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் மணிகண்டன் (21), கரம்பக்குடி தட்டாரத்தெரு பகுதியைச் சேர்ந்த காதர்பாஷா மகன் சேக்அப்சல் (21) மற்றும் கச்சேரிவீதி பகுதியை சேர்ந்த பகுருதீன் மகன் பரித் அகமது ஆகிய மூவரும் நள்ளிரவு 12 மணியளவில் பல்சர் இருசக்கர வாகனத்தில் ரேஸ் ட்ரைவ்வில் ஈடுபட்டுள்ளனர். ரேஸ் ட்ரைவ்வில் ஈடுபட்ட போது கரம்பக்குடி சாலையில் இருந்து திருவோணம் சாலையில் அதிவேகமாக சென்ற பொழுது திருவோணம் சாலையில் உள்ள மங்கள விநாயகர் கோவில் அருகே கருணாநிதி என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவற்றில் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணிகண்டனுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற ஷேக் அப்சல் மற்றும் பரித் அகமது ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது சம்பந்தமாக கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் ரேஸ் ட்ரைவ் செய்து வீட்டின் சுவற்றில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி