ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகளுக்கு சொந்த ஊரில் அஞ்சலி தீபம்

67பார்த்தது
ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகளுக்கு சொந்த ஊரில் அஞ்சலி தீபம்
கந்தர்வகோட்டை துறையூர் ஓங்காரக் குடில் நிறுவனர் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முக்தியடைந்த நிலையில், அவரின் சொந்த ஊரான பிசானத்தூர் கிராமத்தில் அஞ்சலி தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக் குடில் நிறுவனர் குருநாதர் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் துறையூரில்
செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூர் கிராமத்திலுள்ள ஓங்காரக் குடிலில் பொதுமக்கள் புதன்கிழமை அஞ்சலி தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்த கிராம மக்கள் வேன்களில் துறையூருக்கு புறப்பட்டு சென்றனர்.
பிசானத்தூரில் ஆறுமுக அரங்க மகா தேசிகசுவாமிகளின் பூர்வீக வீடு
தொடர்ந்து பராமரிக்கப்பட்டு
வருகிறது. இதன் அருகில்
ஓங்காரக் குடிலும் அமைத்து இந்தப் பகுதியைச் சேர்ந்த
மக்களுக்கு அவர் பசியை
போக்கி வந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி