ஆட்டோ விபத்து: 5 மாணவர்கள் காயம்!

3784பார்த்தது
ஆட்டோ விபத்து: 5 மாணவர்கள் காயம்!
அறந்தாங்கியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் புகல்விழியன்(5), 5ம் வகுப்பு மாணவி லாவண்யா (10), மாணவன் ஸ்ரீஹரி (10), 3ம் வகுப்பு மாணவி நிதிலாஸ்ரீ(8), 6ம் வகுப்பு மாணவி அட்சயா (11) ஆகிய 5 பேரும் வழக்கம்போல் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

புதுக்கோட்டை சாலையில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி அங்கிருந்த உயரழுத்த மின் கம்பத்தில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி