இரு டூவீலர்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் விவசாயி பலி!

579பார்த்தது
ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியைச் சேர்ந்தவர் தனசேகரன் (29) விவசாயி. இவர், தனது விவசாய நிலத்தில் பூக்கள் பயிரிட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தனது மொபட்டில் பூக்களை விற்பனை செய்வதற்காக கீரமங்கலத்தில் உள்ள ஏலகமிசன் கடைக்கு கொண்டு சென்றார். சேந்தன்குடி முந்தரிக்காடு அருகே சென்ற போது, அவ்வழியாக மேற்பனைக்காடு மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் (20) என்பவர் ஓட்டிவந்த டூவீலர் மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த தனசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் போலீசார் தனசேகரன் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், கிருஷ்ணகுமாரை சிகிச்சைக்காகவும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி