கழிவறை, குடிநீர் வசதி இல்லாமல் பள்ளி குழந்தைகள் தின்டாட்டம்!

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் ரூ 28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 25 கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது பெய்த மழையால் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியதால் பொதுமக்கள் வாய்க்கால் வெட்டி மழைநீரை அப்புறப்படுத்தினர் இந்த வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு உள்ளதால் பள்ளி மாணவர்கள் செல்ல வழியில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிவறை வசதி குடிநீர் வசதி இல்லாமல் பள்ளி குழந்தைகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் மேலும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் போர்க்கால அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு மேற்கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :