எலுமிச்சம்பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி!

50பார்த்தது
எலுமிச்சம்பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட மேலத்தூர், அறையாம்பட்டி, கீரமங்கலம், கொத்தமங்கலம், ஆனவயல், எல். என். புரம், புல்லான் விடுதி, நெடுவாசல், வடுகாடு, பனங்குளம் ஆகிய பகுதிகளிலும் கறம்ப குடி தாலுகாவை சேர்ந்த வெட்டன் விடுதி, கருக்கா குறிச்சி ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் எலுமிச்சை சாகுபடி ஈடுபட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சிறு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு மதுரை திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது குறிப்பாக சோப்பு மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்தமாக எலுமிச்சை பழங்களை கொள்முதல் செய்து செல்கின்றன. பொதுவாக கோடைகாலத்தில் குளிர்பான விற்பனை அதிகரிக்கும் என்பதால் எலுமிச்சைக்கு மவுஸ் இருக்கும் இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 5 டன் முதல் 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூபாய் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை மழை காரணமாக குளிர்பான விற்பனை குறைந்ததால் எலுமிச்சை தேவையும் குறைந்தது இதனால் விலை வெளிச்சடைந்துள்ளது. இப்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூபாய் 40 முதல் 50 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி