உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

54பார்த்தது
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மரப்பாலம் மின் நிலையம் சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள வாய்க்கால் சீரமைக்கும் பணியின் போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் உயிரிழந்த பாக்யராஜ், ராஜேஷ்கண்ணன், அந்தோனிசாமி, கமலஹாசன், பாலமுருகன்
ஆகிய ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 இலட்சமும், காயமடைந்த மூன்று நபர்களான சீனிவாசன், பாலமுருகன், குணசேகரன்
ஆகியோருக்கு தலா ரூ. 3 இலட்சமும் நிவாரண தொகைகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். உடன்
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி