சிங்கப்பூா் தமிழறிஞருக்கு இலக்கிய மாமணி விருது

74பார்த்தது
சிங்கப்பூா் தமிழறிஞருக்கு இலக்கிய மாமணி விருது
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் சிங்கப்பூா் தமிழ் இலக்கிய களத்தின் தலைவா் இரத்தின. வெங்கடேசன் மற்றும் கடலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் பேராசிரியா் குழந்தைவேலனாா் ஆகியோருக்கு பொது

சிங்கப்பூா் தமிழறிஞா் இரத்தின. வெங்கடேசன் உள்ளிட்ட 2 பேருக்கு புதுவை தமிழ்ச்சங்கம் சாா்பில் ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மகாகவி பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிங்கப்பூா் தமிழ் இலக்கிய களத்தின் தலைவா் இரத்தின. வெங்கடேசன் மற்றும் கடலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் பேராசிரியா் குழந்தைவேலனாா் ஆகியோருக்கு ‘இலக்கிய மாமணி’ விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இவற்றை, புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து, செயலா் சீனு. மோகன்தாஸ், பொருளாளா் மு. அருள்செல்வம், துணைத் தலைவா்கள் ந. ஆதிகேசவன், ப. திருநாவுக்கரசு, ஆட்சிக் குழு உறுப்பினா்கள் எம். எஸ். ராஜா, கவிஞா் இர. ஆனந்தராசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி