ஆதி திராவிடர் மக்களுக்கு ரூ. 3 கோடியே 91 லட்சம் நிதியுதவி

81பார்த்தது
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ரூ. 3 கோடியே 91 லட்சத்து 69 ஆயிரத்து 589 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 91 லட்சத்து 69 ஆயிரத்து 589 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் தொடர் நோய் சிகிச்சைக்காக 17 பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், ஏழைப் பெண்களின் திருமண உதவித் தொகைக்காக 45 பயனாளிகளுக்கு ரூ. 44 லட்சத்து 50 ஆயிரமும், கருவுற்ற தாய்மார்கள் 33 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொடர்பாக பல்வேறு வகையான உதவி தொகைக்கு ரூ. 2 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 589 தொகை பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி